ஒரே தொடரில் 3 முறை டக் அவுட்: ஜோ ரூட் மோசமான சாதனை


ஒரே தொடரில் 3 முறை டக் அவுட்: ஜோ ரூட் மோசமான சாதனை
x
தினத்தந்தி 8 Sep 2019 4:34 PM GMT (Updated: 8 Sep 2019 4:34 PM GMT)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில், 3 முறை டக் அவுட்டாகி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மோசமான சாதனை படைத்துள்ளார்.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் சுமித்தின் இரட்டை சதத்தோடு 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி  6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த போது ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, 383 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட் செய்து வருகிறது. இதில் 2-வது விக்கெட்டாக  ஜோ ரூட் தனது முதல் பந்திலேயே  டக் அவுட்டாகி வெளியேறினார். இது இந்த தொடரில் ஜோ ரூட்டின் 3-வது டக் அவுட் ஆகும். இதன்மூலம் ஜோ ரூட் ஆஷஸ் தொடரில் 3 முறை டக் அவுட் ஆன இங்கிலாந்து கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

ஜோ ரூட் இதற்கு முன்னராக 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் முதல் பந்திலும்,  3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2-வது பந்திலும் டக் அவுட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story