கிரிக்கெட்

டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க பரிசீலிப்போம் - தேர்வு குழு தலைவர் + "||" + Let us consider Rohit Sharma as the opener in the Test match - Chairman of the Select Committee

டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க பரிசீலிப்போம் - தேர்வு குழு தலைவர்

டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க பரிசீலிப்போம் - தேர்வு குழு தலைவர்
டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க பரிசீலிப்போம் என தேர்வு குழு தலைவர் கூறி உள்ளார்.
புதுடெல்லி,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் ரோகித் சர்மா களம் இறக்கப்படவில்லை. தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். லோகேஷ் ராகுல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே 44, 38, 13, 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் கங்குலி, கும்பிளே உள்ளிட்டோர் வற்புறுத்தினார்கள். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேட்ட போது, ‘வெஸ்ட்இண்டீஸ் போட்டி தொடருக்கு பிறகு தேர்வு குழுவினர் சந்திக்கவில்லை. லோகேஷ் ராகுலின் பார்ம் கவலை அளிக்கிறது. டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்ற கருத்தை நிச்சயம் கருத்தில் கொள்வோம். இது குறித்து நாங்கள் ஆலோசனை செய்வோம்’ என்று பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி; சிவம் துபே விளையாடுவார் என ரோகித் சர்மா சூசக தகவல்
வங்காளதேச அணிக்கு எதிராக நாளை நடைபெறும் இருபது ஓவர் போட்டியில் சிவம் துபே விளையாடுவார் என ரோகித் சர்மா சூசக தகவல் தெரிவித்து உள்ளார்.
2. பந்து தாக்கி ரோகித் சர்மா காயம்
பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ரோகித் சர்மா காயமடைந்தார்.
3. 3வது டெஸ்ட் போட்டி: ரோகித் இரட்டை சதம் விளாசல்; இந்தியா 371/5 (89 ஓவர்கள்)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசியுள்ளார்.
4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; ரஹானே சதம் விளாசல்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானே சதம் விளாசினார்.
5. 2வது டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்
2வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.