கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் நீடிப்பு + "||" + Steven Smith tops Test cricket batsman rankings

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் நீடிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் நீடிப்பு
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (937 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி கேப்டன் விராட்கோலி (903 புள்ளிகள்) 2-வது இடத்திலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (878 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இந்திய வீரர் புஜாரா (825 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் (749 புள்ளிகள்) 5-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். பவுலர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (914 புள்ளிகள்) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் காஜிசோ ரபடா (851 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா (835 புள்ளிகள்) 3-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (814 புள்ளிகள்) 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர். தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (813 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (472 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். வங்காளதேச அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் (397 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (390 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.