தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி 303 ரன்னில் ‘ஆல்-அவுட்’


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி 303 ரன்னில் ‘ஆல்-அவுட்’
x
தினத்தந்தி 11 Sep 2019 12:09 AM GMT (Updated: 11 Sep 2019 12:09 AM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி 303 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

திருவனந்தபுரம்,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய ‘ஏ’ அணி கேப்டன் சுப்மான் கில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 51.5 ஓவர்களில் 164 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது. சுப்மான் கில் 66 ரன்னுடனும், அங்கித் பாவ்னே 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய ‘ஏ’ அணி 87.5 ஓவர்களில் 303 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மான் கில் 90 ரன்னும், ஜலஜ் சக்சேனா 61 ரன்னும் (நாட்-அவுட்) எடுத்தனர்.

139 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. ஹென்ரிச் கிளாசென் 35 ரன்னுடனும், வான் முல்டெர் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story