கிரிக்கெட்

20 ஓவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமனம் + "||" + T20, for one-day cricket Pollard appointed West Indies captain

20 ஓவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமனம்

20 ஓவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமனம்
ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போர்ட் ஆப் ஸ்பெயின்,

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று 9-வது இடமே பிடித்தது. கடந்த மாதம் சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது.


இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணியை மறுகட்டமைப்பு செய்ய ரிக்கி ஸ்கெரிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாசன் ஹோல்டரும், 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கார்லோஸ் பிராத்வெய்ட்டும் நீக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜாசன் ஹோல்டர் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடருவார் என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

32 வயது ஆல்-ரவுண்டரான பொல்லார்ட் கடந்த மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான அணியில் மீண்டும் இடம் பிடித்து இருந்தார். ஒருநாள் போட்டியில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு அவர் ஆடியது கிடையாது. உலக கோப்பை அணியிலும் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. பொல்லார்ட் 101 ஒருநாள் போட்டியில் விளையாடி 2,289 ரன்னும், 62 இருபது ஓவர் போட்டியில் விளையாடி 903 ரன்னும் எடுத்துள்ளார்.

கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் பொல்லார்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கிய வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வரும் உலக கோப்பை போட்டிக்கு அணியை வலுப்படுத்துதல் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் செயல்படுவது ஆகியவற்றில் உடனடியாக கவனம் செலுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமனம் செய்யவும், அணி தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரவும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய சிறப்பு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பொல்லார்ட் வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘சூப்பர் ஓவர்’ முறை தேவையில்லை: ராஸ் டெய்லர் சொல்கிறார்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘சூப்பர் ஓவர்’ முறை தேவையில்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் யோசனை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நியூசிலாந்தில் நடத்தலாம் என டீன் ஜோன்ஸ் யோசனை தெரிவித்துள்ளார்.