கிரிக்கெட்

டோனி இன்றிரவு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்; ஓய்வு அறிவிப்பை வெளியிட திட்டம்? + "||" + Dhoni meets with the press tonight Plan to issue a Notice of Leave

டோனி இன்றிரவு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்; ஓய்வு அறிவிப்பை வெளியிட திட்டம்?

டோனி இன்றிரவு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்; ஓய்வு அறிவிப்பை வெளியிட திட்டம்?
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவிப்பார் என கூறப்படுகிறது.
மும்பை,

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய மில்லேனியம் கேள்வியாக இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் தல டோனி.

அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடரில் எம்எஸ் டோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், டோனியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.

அந்த போட்டியை நினைவு கூர்ந்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டுள்ளார்

எம்எஸ் டோனியுடனான முக்கியமான நிகழ்வை விராட் கோலி தெரிவித்திருப்பதால், டோனி ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று  இரவு 7 மணிக்கு டோனி நிருபர்களை சந்திக்க அழைப்பு  விடுக்கப்பட்டு உள்ளது என தகவல்   வெளியாகி உள்ளது. இதனால் அவர் இன்று ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில்  இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி இன்று ஒருநாள், 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என  கூறப்படுகிறது.