கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிப்பு + "||" + Sarfraz Ahmed extends captaincy of Pakistan squad

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிப்பு

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிப்பு
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிக்கப்பட்டுள்ளார்.
லாகூர்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டியதால் அதிருப்தி அடைந்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட்டது. கேப்டன் 32 வயதான சர்ப்ராஸ் அகமதுவும் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் இந்த மாத இறுதியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. ஒவ்வொரு தொடரின் அடிப்படையில் அவரை பதவியில் தொடர வைப்பதா? அல்லது நீக்குவதா? என்பதை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும். துணை கேப்டனாக 24 வயதான பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் இருக்க அழைப்பு வந்தது’ - டிவில்லியர்ஸ் தகவல்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் இருக்க தனக்கு அழைப்பு வந்தது என்று அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.