கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்: அஸ்வின் அசத்தல்; விஜய் சொதப்பல் + "||" + R Ashwin continues fine form in County C’ship, M Vijay fails to impress on Somerset debut

கவுண்டி கிரிக்கெட்: அஸ்வின் அசத்தல்; விஜய் சொதப்பல்

கவுண்டி கிரிக்கெட்: அஸ்வின் அசத்தல்; விஜய் சொதப்பல்
இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் அஸ்வின் அசத்தி உள்ளார். விஜய் சொதப்பி வருகிறார்.
லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார். ஆனால் இந்த போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அஸ்வின் 4 கவுண்டி ஆட்டத்தில் ஆடி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் சோமர்செட் அணிக்காக களம் இறங்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் யார்க்ஷைர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 7 ரன்னில் ஆட்டம் இழந்ததோடு, 2-வது இன்னிங்சில் ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்தார்.