கிரிக்கெட்

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் + "||" + To PM Modi Congratulating Indian cricketers

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின்  69-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொதுமக்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், பிரதமர் மோடிக்கு தங்களது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்திய கேப்டன் விராட் கோலி, 

"எங்கள் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்தை அதிக உயரத்திற்கு அழைத்துச் செல்வதற்கான உங்கள் முயற்சியில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறோம்," என்று கோலி டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர்,

வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி  ஜி. ஆரோக்கியமான மற்றும் தூய்மையான இந்தியாவுக்கான உங்கள் பார்வை அனைவருக்கும் ஒரு உத்வேகம். நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், என்று சச்சின் பதிவிட்டுள்ளார்.

இவர்களை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியா , குருணால் பாண்டியா, கேதர் ஜாதவ், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் தங்களது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்தித்தார்.
2. பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்
பெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. பிரதமர் மோடியுடன் நாராயணசாமி சந்திப்பு: கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தல்
பிரதமர் மோடியை நாராயணசாமி நேரில் சந்தித்தார். அப்போது அவர் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தியதாக கூறினார்.
4. பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார்
பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
5. நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் - பிரதமர் மோடி
நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.