கிரிக்கெட்

ஸ்காட்லாந்து வீரர் 41 பந்தில் சதம் அடித்து சாதனை + "||" + Scotland player record century in 41 balls

ஸ்காட்லாந்து வீரர் 41 பந்தில் சதம் அடித்து சாதனை

ஸ்காட்லாந்து வீரர் 41 பந்தில் சதம் அடித்து சாதனை
ஸ்காட்லாந்து வீரர் 41 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
டப்ளின்,

அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் இடையிலான சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தொடர் டப்ளின் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 3 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு அணியின் 6-வது அதிகபட்சம் இதுவாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் 26 வயதான ஜார்ஜ் முன்சேவும், கேப்டன் கைல் கொயட்ஸிரும் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் திரட்டினர். 20 ஓவர் போட்டியில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 3-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதில் ஜார்ஜ் முன்சே 121 ரன்கள் (56 பந்து, 5 பவுண்டரி, 14 சிக்சர்) விளாசினார். 41 பந்துகளில் 100 ரன்களை கடந்து 3-வது அதிவேக சதத்தையும் பதிவு செய்தார். அத்துடன் மேக்ஸ் ஓ டவுட்டின் ஒரே ஓவரில் 4 சிக்சரும், 2 பவுண்டரியும் நொறுக்கித் தள்ளினார். முன்சேவின் சரவெடி ஆட்டத்தின் மூலம் ஸ்காட்லாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.