கிரிக்கெட்

2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது தென் ஆப்பிரிக்கா + "||" + India vs South Africa 2nd T20I Live Score: Virat Kohli Wins Toss, Opts To Bowl In Mohali

2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது தென் ஆப்பிரிக்கா

2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது தென் ஆப்பிரிக்கா
இந்திய அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்க அணி நிர்ணையித்துள்ளது.
மொகாலி,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று  நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

தென் ஆப்பிரிக்க அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டி காக்கும், ஹெண்ட்ரிக்ஸும் களம் இறங்கினர். ஹெண்ட்ரிக்ஸ் 6 ரன்களில் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பவுமாவும், டிகாக்கும் இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். இதனால் ரன் வேகம் அதிகரித்தது.  சைனி பந்தில் டி காக் ( 52 ரன்கள் , 37 பந்துகள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்வேகம் குறைந்தது. பவுமா 49 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் வந்த வீரர்கள் சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை. அபாயகரமான பேட்ஸ்மேன் மில்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு  149 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சஹர் 2 விக்கெட்டுகளையும் , சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து  150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட் செய்து வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வார்னர், பிஞ்ச் சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி
மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஊதித்தள்ளியது.
2. “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறி உள்ளார்.
3. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: மும்பையில் இன்று நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.
4. பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: சென்னையில் நடக்கிறது
பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.
5. இந்தியாவுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லை: ஓய்வுபெற்ற 100 அதிகாரிகள் கடிதம்
இந்தியாவுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லை என ஓய்வுபெற்ற 100 அதிகாரிகள் மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.