முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது ஜிம்பாப்வே


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது ஜிம்பாப்வே
x
தினத்தந்தி 18 Sep 2019 11:17 PM GMT (Updated: 18 Sep 2019 11:17 PM GMT)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை ஜிம்பாப்வே அணி இழந்தது.

சட்டோகிராம்,

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் சட்டோகிராமில் நேற்று நடந்த 4-வது லீக்கில் வங்காளதேச அணி, ஜிம்பாப்வேவை சந்தித்தது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மக்முதுல்லா 62 ரன்கள் (41 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேச அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. வங்காளதேசம் (2 வெற்றி, ஒரு தோல்வி), ஆப்கானிஸ்தான் (2 வெற்றி) அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதே மைதானத்தில் நாளை நடக்கும் 5-வது லீக்கில் ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே மோதுகின்றன.

Next Story