கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி 417 ரன் குவிப்பு + "||" + Test against South Africa 'A': Indian A team amassed 417 runs

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி 417 ரன் குவிப்பு

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி 417 ரன் குவிப்பு
தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 417 ரன்கள் குவித்தது.
மைசூரு,

இந்தியா ‘ஏ’-தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மைசூருவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி தொடக்க நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது.


இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 123 ஓவர்களில் 417 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. கருண்நாயர் 78 ரன்னும், ஷிவம் துபே 68 ரன்னும், விருத்திமான் சஹா 60 ரன்னும் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ராம் (83 ரன்), முல்டெர் (9 ரன்) களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 376 ரன்கள் இலக்கு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது
3. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 395 ரன்கள் குவிப்பு
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 395 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது. அபித் அலி, ஷான் மசூத் சதம் அடித்தனர்.
4. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி முன்னிலை
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
5. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி நிதான ஆட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி நிதானமாக விளையாடி வருகிறது.