கிரிக்கெட்

இந்தியா ஏ- தென்ஆப்பிரிக்கா ஏ டெஸ்ட் போட்டி ‘டிரா’ + "||" + India A - South Africa A Test match Tie

இந்தியா ஏ- தென்ஆப்பிரிக்கா ஏ டெஸ்ட் போட்டி ‘டிரா’

இந்தியா ஏ- தென்ஆப்பிரிக்கா ஏ டெஸ்ட் போட்டி ‘டிரா’
இந்தியா ஏ- தென்ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது.
மைசூரு,

இந்தியா ஏ - தென்ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மைசூருவில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ 417 ரன்களும், தென்ஆப்பிரிக்கா ஏ 400 ரன்களும் எடுத்தன.


இந்த நிலையில் 17 ரன்கள் முன்னிலையுடன் கடைசி நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 70 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் இந்த போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. பிரியங் பன்சால் சதமும் (109 ரன், 9 பவுண்டரி, 4 சிக்சர்), கருண் நாயர் அரைசதமும் (51 ரன்) அடித்தனர். சுப்மான் கில் டக்-அவுட் ஆனார். இந்த தொடரை இந்திய ஏ அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா ஏ - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் மாற்றமா?
இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.