தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்த அனுமதி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்த அனுமதி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Sep 2019 12:14 AM GMT (Updated: 21 Sep 2019 12:14 AM GMT)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்தலை வருகிற 28-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அறிவித்து இருந்தது. லோதா கமிட்டி சிபாரிசுபடி நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனை அதிகரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ.போடே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அத்துடன் நிர்வாகிகள் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் குறித்த முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையின் படி நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story