இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ் !


இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ் !
x
தினத்தந்தி 21 Sep 2019 9:47 AM GMT (Updated: 21 Sep 2019 9:47 AM GMT)

இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்டுவிட்டதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டு பிளசிஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

துபாய், 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  டி 20 போட்டிகளில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. அக்டோபர் 2 ஆம் தேதி  முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது.  

டி20 அணியில் இடம்பெறாத பாப் டு பிளசிஸ், தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் இணைய இந்தியா வரவிருந்த போது,  துபாயில் இருந்து இணைப்பு விமானத்தை தவறவிட்டார். இதனால், கோபம் அடைந்த டு பிளஸிஸ் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை கடுமையாக சாடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டு பிளசிஸ் வெளியிட்டுள்ள பதிவில், "விமான பயணங்களில் இன்று மோசமான அனுபவம். இதில் எல்லாமே தவறாக முடிந்தது" என்று பதிவிட்டார். "துபாய்க்கு வரவேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்தது. இப்போது நான் இந்தியாவுக்கு செல்ல வேண்டிய விமானத்தை தவறவிடப்போகிறேன். அடுத்த விமானம் 10 மணி நேரம் கழித்து தான்” என்று பதிவிட்டுள்ளார்.

சில மணி நேரம் கழித்து, வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,  "வாழ்க்கை உங்களுக்கு லெமன் கொடுத்தால், லெமனேட் செய்யுங்கள். என்னுடைய கிரிக்கெட் பேக் இன்னும் வந்தடையவில்லை. நான் அதற்காக சிரிக்க வேண்டும் ஆனால், பிரிட்டிஷ் ஏர்வேஸில் இன்றைய பயணம் மிக மோசமாக இருந்தது. 

இங்கு எல்லாமே தப்பாகிவிட்டது.  இறுதியில் என் பேட்களை நான் திரும்பப் பெறுவேன் என்று நம்புகிறேன்," என்று ட்விட் செய்தார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் டுபிளசிஸ் கருத்துக்கு  பதிலளித்தது.  எனினும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் விமர்சித்து வருகின்றனர்.

Next Story