கிரிக்கெட்

தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த தவான்: ரோஹித் சர்மா வெளியிட்ட வீடியோ + "||" + Dhawan who was talking to himself Video released by Rohit Sharma

தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த தவான்: ரோஹித் சர்மா வெளியிட்ட வீடியோ

தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த தவான்: ரோஹித் சர்மா வெளியிட்ட வீடியோ
இந்திய வீரர் ஷிகர் தவான் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்றினை ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்தானது. 2-வது  போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 3-வது போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள்  விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றனர். அப்போது, விமானத்தில் ஷிகர் தவான் தனக்குத்தானே பேசும் வீடியோ ஒன்றை ரோகித் சர்மா எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இல்லை, அவர் என்னிடம் பேசவில்லை,  கற்பனை நண்பனிடம் பேசும் அளவிற்கு இவருக்கு வயதும் அதிகமாகி விட்டது" என்று அந்த வீடியோ உடன்  ரோகித் சர்மா பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், "அவர் வீடியோ எடுத்தபோது, நான் கவிதை படித்து கொண்டிருந்தேன். நான் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்து கொண்டிருந்தேன். அந்தக் கவிதையை நான் இன்னும் கூட சரியாக சொல்லி பழகி இருக்கலாம்" என ஷிகர் தவான் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ‘நியூசிலாந்து மண்ணில் விளையாடுவது எளிதாக இருக்காது’ -ரோகித் சர்மா
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு (ஜனவரி 24-ந்தேதி முதல் ஐந்து 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட்) விளையாட உள்ளது.
2. 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிகளில் அதிக ரன்கள் குவித்து கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
3. ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று தொடங்கிய கடைசி டெஸ்டில் இந்திய அணி 39 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், ரோகித் சர்மாவின் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது.
4. ரோகித் சர்மா, அஸ்வின் அணியில் இடம்பெறாதது குறித்து ரஹானே விளக்கம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ஆர்.அஸ்வின் ஆடும் லெவனில் இடம்பெறாதது குறித்து ரஹானே விளக்கம் அளித்துள்ளார்.