கிரிக்கெட்

பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார், கங்குலி + "||" + Ganguly re-elected as president of Bengal Cricket Association

பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார், கங்குலி

பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார், கங்குலி
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி மீண்டும் தேர்வாக உள்ளார்.
கொல்கத்தா,

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி ஒரு மனதாக மீண்டும் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் கங்குலி 10 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். லோத்தா கமிட்டியின் பரிந்துரைப்படி ஒருவர் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி வகித்தால் அதன் பிறகு இடைவெளிவிட வேண்டும். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்பில் கங்குலி 2020-ம் ஆண்டு ஜூலையுடன் 6 ஆண்டு பணியை நிறைவு செய்வது குறிப்பிடத்தக்கது.