கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: எம்.எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா + "||" + 20 Over cricket Rohit Sharma equals MS Dhoni record

20 ஓவர் கிரிக்கெட்: எம்.எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா

20 ஓவர் கிரிக்கெட்: எம்.எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா
20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகள் விளையாடி இந்திய வீரர்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.
பெங்களூரு.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 9 ரன்னில் கேட்ச் ஆனார். இருப்பினும் ரோகித் சர்மா இப்போட்டி விளையாடியதன் மூலம் டோனியின் சாதனைகளில் ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது இந்திய அளவில் அதிக சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் டோனியுடன் முதல் இடத்தை ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டார். இதுவரை இருவரும் 98 சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக இந்திய அளவில் அதிக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில், சுரேஷ் ரெய்னா 78 போட்டிகள் , விராட் கோலி 72 போட்டிகள், யுவராஜ் சிங் 58 போட்டிகள், தவான் 55 போட்டிகள் என அடுத்தடுத்து உள்ளனர்.

ரோகித் சர்மா ஏற்கனவே 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், அதிக ரன்கள் (2-வது இடம்) அடித்த வீரர் என பல்வேறு சாதனைகளை வைத்துள்ளார்.