கிரிக்கெட்

விராட்கோலிக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை + "||" + Virat Kohli receives ICC warning

விராட்கோலிக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை

விராட்கோலிக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5-வது ஓவரில் பேட்டிங் செய்கையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ரன் எடுக்க ஓடுகையில் தென்ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் தோள்பட்டையில் இடித்தார். இந்த சம்பவம் குறித்து ஆடுகள நடுவர்கள் ஐ.சி.சி. போட்டி நடுவர் ரிச்சர்ட்சனிடம் புகார் தெரிவித்தனர். தவறை ஒத்துக்கொண்ட விராட்கோலி எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாக விதிக்கப்பட்டு இருக்கிறது. 2016-ம் ஆண்டு புதிய விதிமுறை அமல்படுத்திய பிறகு விராட்கோலி இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது இது 3-வது முறையாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.
2. முககவசம் அணியும் விவகாரத்தில் காவல்துறையினர் எனது பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது நாராயணசாமி எச்சரிக்கை
முககவசம் அணியும் விவகாரத்தில் காவல்துறையினர் எனது பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
3. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும்; தலைமை செயலாளர் எச்சரிக்கை
கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.
5. ஆந்திர மாநில கிருஷ்ணாபுரம் அணை திறப்பு எதிரொலி: கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அணை திறக்கப்பட்டதன் எதிரொலியாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.