கிரிக்கெட்

ஷேன் வார்னே வாகனம் ஓட்ட ஒரு ஆண்டு தடை + "||" + Shane Warne banned from driving for 12 months

ஷேன் வார்னே வாகனம் ஓட்ட ஒரு ஆண்டு தடை

ஷேன் வார்னே வாகனம் ஓட்ட ஒரு ஆண்டு தடை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே வாகனம் ஓட்ட ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே லண்டனில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் கார் ஓட்டுகையில் குறிப்பிட்ட அளவு வேகத்தை விட அதிகமான வேகத்தில் காரை ஓட்டி போலீசில் சிக்கினார். இது தொடர்பான வழக்கு அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வார்னே வேக கட்டுப்பாட்டு விதிமுறையை மீறிய 6-வது சம்பவம் இதுவாகும். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஷேன் வார்னே ஒரு ஆண்டுக்கு வாகனம் ஓட்ட தடை விதித்தார். அத்துடன் அவருக்கு ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.ஆசிரியரின் தேர்வுகள்...