கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தால் விலகல் + "||" + Bumrah ruled out of Test series against South Africa

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தால் விலகல்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தால் விலகல்
இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
புதுடெல்லி,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக பும்ரா காயத்தில் சிக்கியுள்ளார். ஸ்கேன் பரிசோதனையில், அவரது முதுகின் அடிப்பகுதியில் அழுத்தத்தினால் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா நேற்று விலகினார்.


25 வயதான பும்ரா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்வார். அதை கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு கண்காணிக்கும். 25 வயதான பும்ரா டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறார். இதுவரை 12 டெஸ்டுகளில் விளையாடி 62 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் பும்ரா இந்திய மண்ணில் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது காயத்தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘பும்ராவின் காயம் குணமடைய குறைந்தது 7 முதல் 8 வாரங்கள் ஆகும். அவரால் அடுத்து வரும் வங்காளதேசத்துக்கு எதிரான தொடரிலும் (நவம்பர் 3-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட்) விளையாட முடியாது. அவர் நவம்பர் மாதம் வரை ஓய்வு எடுக்க வேண்டி இருக்கும். நல்லவேளையாக இந்த காயத்தை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து விட்டோம். இல்லாவிட்டால் இத்தகைய காயம் குணமடைய நீண்ட காலம் பிடிக்கும்’ என்றார்.

பும்ராவுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 31 வயதான உமேஷ் யாதவ் 41 டெஸ்டுகளில் விளையாடி 119 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்டில் ஆடியிருந்தார்.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, சுப்மான் கில்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு
கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
2. இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? - முன்னாள் தேர்வு குழு தலைவர் விளக்கம்
இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
3. இந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங்
இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
4. நான் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் - யுவராஜ்சிங் பெருமிதம்
நான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.
5. ‘இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது’ -கேரி ஸ்டீட்
இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ஸ்கோரில் (165 ரன் மற்றும் 191 ரன்) சுருண்டது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.