கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா + "||" + India beat South Africa in women's T20

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
சூரத்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் சூரத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்கள் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அறிமுக வீராங்கனையாக களம் கண்ட 15 வயதான ஷபாலி வர்மா ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்தார்.


தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 3 மெய்டனுடன் 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டங்களில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சுலபமாக வெற்றி பெற்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...