கிரிக்கெட்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுக்குழு கூட்டம் - சென்னையில் நாளை நடக்கிறது + "||" + Tamil Nadu Cricket Association General Meeting - Chennai to be held tomorrow

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுக்குழு கூட்டம் - சென்னையில் நாளை நடக்கிறது

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுக்குழு கூட்டம் - சென்னையில் நாளை நடக்கிறது
சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது.
சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.45 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார். போட்டி எதுவும் இல்லை என்றால் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாகவும், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.