கிரிக்கெட்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது + "||" + The Sri Lankan cricket team is coming to India early next year

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வர உள்ளது.
புதுடெல்லி,

அடுத்த ஆண்டு (2020) தொடக்கத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 20 ஓவர் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்திருப்பதால் ஜிம்பாப்வேக்கு பதிலாக இலங்கை அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது.


இந்தியாவின் அழைப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது. இதன்படி இலங்கை அணி ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் கவுகாத்தி (ஜன.5), இந்தூர் (ஜன.7), புனே (ஜன.10) ஆகிய இடங்களில் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளன.
2. தாய்லாந்து பேட்மிண்டன் இன்று தொடக்கம்: சாய்னா, ஸ்ரீகாந்த் சாதிப்பார்களா?
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா, வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
3. அடுத்தமாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவில் கோபுர கலச திருப்பணி தொடக்கம்
அடுத்த மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவில் கோபுர கலச திருப்பணி தொடங்கியது.
4. கரூர் மாவட்டத்தில் 1,685 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் தொடக்கம்
கரூர் மாவட்டத்தில் 1,685 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்புமனுதாக்கல் செய்யும் பணி தொடங்கியது.
5. மீண்டும் பயிற்சியை தொடங்கினார், பும்ரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளார்.