கிரிக்கெட்

இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ + "||" + India, Sri Lanka 20 Over cricket Series BCCI releases match schedule

இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மும்பை,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

இதனையடுத்து, இலங்கை அணி வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. பிசிசிஐ தற்போது இந்த போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இப்போட்டிகளானது ஜனவரி 5 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

அதன்படி  முதல் போட்டி ஜனவரி 5-ந் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி ஜனவரி 7-ந் தேதி இந்தூரிலும், 3-வது போட்டி ஜனவரி 10-ந் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா?
சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், இந்திய தொடர் பாதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
2. 2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
3. இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
5. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தடுமாற்றம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது.