கிரிக்கெட்

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி மீண்டும் தேர்வு + "||" + Ganguly re-elected as president of Bengal Cricket Association

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி மீண்டும் தேர்வு

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி மீண்டும் தேர்வு
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நரேஷ் ஓஜா, செயலாளராக அவிஷேக் டால்மியா, இணைச் செயலாளராக தேபப்ரதா தாஸ், பொருளாளராக தேபசிஸ் கங்குலி ஆகியோரும் போட்டியின்றி தேர்வானார்கள்.


சவுரவ் கங்குலி 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை தான் இந்த பொறுப்பில் நீடிக்க முடியும். கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் 6 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தால், அதன் பிறகு இடைவெளியிட வேண்டும். கங்குலி 2014-ம் ஆண்டில் இருந்து பெங்கால் கிரிக்கெட் சங்க பொறுப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.