கிரிக்கெட்

இந்திய லெவன்-தென்ஆப்பிரிக்கா பயிற்சி ஆட்டம் ‘டிரா’ ரோகித் சர்மா ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம் + "||" + India Eleven-South Africa Practice game Draw

இந்திய லெவன்-தென்ஆப்பிரிக்கா பயிற்சி ஆட்டம் ‘டிரா’ ரோகித் சர்மா ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம்

இந்திய லெவன்-தென்ஆப்பிரிக்கா பயிற்சி ஆட்டம் ‘டிரா’ ரோகித் சர்மா ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம்
இந்திய லெவன்- தென்ஆப்பிரிக்கா மோதிய பயிற்சி கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய இந்திய லெவன் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்தார்.
விஜயநகரம்,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன்- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் நடந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2-வது நாளில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 279 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. பிலாண்டர் 48 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டெம்பா பவுமா 87 ரன்களுடன் (14 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய லெவன் அணிக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக விளையாடப்போகும் ரோகித் சர்மா அதற்கு முன்னோட்டமாக இந்த பயிற்சி ஆட்டத்தில் தொடக்க வீரராக இறங்கினார். 2 பந்து மட்டுமே தாக்குப்பிடித்த ரோகித் சர்மா (0) வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் வீசிய பந்தில் மாற்று விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஈஸ்வரன் 13 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 39 ரன்னிலும் வெளியேறினர்.

பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பிரியங் பன்சால் (60 ரன்), சித்தேஷ் லாட் (52 ரன்), விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் (71 ரன், 57 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் அடித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த பெருமைக்குரிய கருண் நாயர் (19 ரன்) சோபிக்கவில்லை. இந்திய லெவன் அணி 64 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளும், பிலாண்டர் 2 விக்கெட்டுகளும், ரபடா, செனுரன் முத்துசாமி, டேன் பீட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்: அசத்தும் ரோகித் சர்மா
இந்திய அணி வீரர் ரோகித் சர்மா இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வருகிறார்.
2. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.
3. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ரத்து
இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
4. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.