இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டுவின் சாதனை சதம் வீண்


இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டுவின் சாதனை சதம் வீண்
x
தினத்தந்தி 29 Sep 2019 11:41 PM GMT (Updated: 29 Sep 2019 11:42 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டுவின் சாதனை சதம் வீணானது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஆட்டம் சிட்னியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. பெத் மூனி 113 ரன்கள் (61 பந்து, 20 பவுண்டரி) விளாசினார். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு சதம் (113 ரன், 66 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்) நொறுக்கியும் பலன் இல்லை. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை வீராங்கனை ஒருவர் அடித்த முதல் சதம் இதுவாகும். அத்துடன் இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Next Story