கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி + "||" + Pakistan wins 2nd ODI against Sri Lanka

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
கராச்சி,

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கராச்சியில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 11-வது சதம் கண்ட பாபர் அசாம் 115 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் 54 ரன்னும் எடுத்தனர். பின்னர் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷீகன் ஜெயசூர்யா 96 ரன்னும், தசுன் ஷனகா 68 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் ஷின்வாரி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின், 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.
2. கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட்
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
3. குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால், அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது
தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
5. தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகா 336 ரன்னில் ஆல்-அவுட்
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடக அணி 336 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.