கிரிக்கெட்

டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படும் - இந்திய கேப்டன் கோலி பேட்டி + "||" + If Rohit Sharma can do in Tests what he did in ODIs, it will be great for India: Virat Kohli

டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படும் - இந்திய கேப்டன் கோலி பேட்டி

டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படும் - இந்திய கேப்டன் கோலி பேட்டி
டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக முதல்முறையாக கால்பதிக்கும் ரோகித் சர்மாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அறிவித்தார். இதில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவும், விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹாவும் இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு வழங்குவது குறித்து கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-


ரோகித் சர்மாவை டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்குவது குறித்து நீண்ட காலமாகவே விவாதித்து வந்தோம். அதற்கு இதுவே உகந்த நேரமாக கருதுகிறோம். தொடக்க வரிசையில் அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளோம்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஆரம்பத்தில் மிடில் வரிசையில் விளையாடினார். ஆனால் திடீரென அவரை தொடக்க வீரராக ஆட வைப்பது குறித்து விவாதித்து 6-8 மாதங்களுக்குள் டாப் வரிசைக்கு வந்து விட்டார். அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனைகளை நீங்களே அறிவீர்கள். இதே போல் டெஸ்டிலும் தொடக்க வரிசையில் ரோகித் சர்மா அசத்தினால், அது நமது டாப் வரிசையை மேலும் வலுப்படுத்தும். ஆனால் அவர் விஷயத்தில் நாங்கள் அவசரம் காட்டமாட்டோம். டெஸ்டில் தன்னை நிலைநிறுத்தி சாதிப்பதற்கு அவருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படும். 


இந்த டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணியை ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹா கவனிப்பார். அவர் காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல்தகுதியை எட்டி விட்டார். சஹாவின் விக்கெட் கீப்பிங் திறமையை அனைவரும் பார்த்து இருப்பார்கள். அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கில் சிறப்பாக ஆடியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக காயத்தால் சில காலம் ஒதுங்க வேண்டியதாகி விட்டது. என்னை பொறுத்தவரை சஹா உலகின் சிறந்த விக்கெட் கீப்பர். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை சஹாவுக்கே முதல் முன்னுரிமை.

இந்த போட்டியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வினும், ஜடேஜாவும் விளையாடுவார்கள். உள்ளூரில் அஸ்வினின் பந்து வீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இவ்வாறு கோலி கூறினார்.

32 வயதான ரோகித் சர்மா 27 டெஸ்டில் விளையாடி 3 சதம் உள்பட 1,585 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் ஆடியிருந்தார். 34 வயதான விருத்திமான் சஹா 32 டெஸ்டில் ஆடி 3 சதம் உள்பட 1,164 ரன்கள் சேர்த்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஜனவரியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது - விராட் கோலி
கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது என விராட் கோலி கூறியுள்ளார்.
2. போலியான தகவல்களை பரப்புவது கொரோனா பரவுவதை காட்டிலும் ஆபத்தான விஷயம் - விராட் கோலி வீடியோ
கொரோனா பரவுவதால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் போலி தகவல்களை பரப்ப வேண்டாம் என டிக்டாக் சார்பாக விராட் கோலி வீடியோ வெளியிட்டுள்ளார்.
3. ஆர்சிபி அணியை விட்டு விலக மாட்டேன் - விராட் கோலி
ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. கொரோனா: அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் - விராட் கோலி
அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் என விராட் கோலி கூறியுள்ளார்.
5. டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி? நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் வெளியிட்ட சுவாரஷ்ய தகவல்
கிரிக்கெட் போட்டியில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி இருக்கும்? என நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் சுவாரஷ்ய தகவலை தெரிவித்துள்ளார்.