கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி அபாரம் + "||" + Double ton for Mayank as India call the shots

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி அபாரம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான  டெஸ்ட்: மயங்க் அகர்வால்  இரட்டை சதம் விளாசி அபாரம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்.
விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  நேற்று தேநீர் இடைவேளையின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சீக்கிரமாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி  59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள்  எடுத்து இருந்தது.

இதன்பின்பு தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.  சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா  176 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் மயங்க் அகர்வால் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும்.  


தொடர்புடைய செய்திகள்

1. விசாகப்பட்டினம் துயர சம்பவம் எதிரொலி தொழில் நிறுவனங்களை திறக்க புதிய வழிமுறைகள் - மத்திய அரசு அறிவிப்பு
விசாகப்பட்டினம் துயர சம்பவம் எதிரொலியாக தொழில் நிறுவனங்களை திறப்பது தொடர்பாக புதிய வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் மீண்டும் விஷவாயு கசிந்ததாக வதந்தி
விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.
3. விசாகப்பட்டினம் ரசாயண தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு
விசாகப்பட்டினம் ரசாயண தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
4. பயிற்சி கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது: இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், ரிஷாப் பண்ட் அரைசதம் அடித்தனர்
நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், ரிஷாப் பண்ட் அரைசதம் அடித்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...