கிரிக்கெட்

டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து ரோகித் மற்றும் மயங்க் சாதனை + "||" + Rohit-Agarwal becomes 3rd Indian opening pair to share 300-run stand

டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து ரோகித் மற்றும் மயங்க் சாதனை

டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து ரோகித் மற்றும் மயங்க் சாதனை
டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது இந்திய தொடக்க ஆட்டக்கார இணை என்ற சாதனையை ரோகித் மற்றும் மயங்க் படைத்து உள்ளனர்.
விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.  இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர்.

இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது.  ரோகித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதமும், (10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள்) 154 பந்துகளில் சதமும் நிறைவு செய்துள்ளார்.  இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது.

இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் (ரன்ரேட் 3.41) சேர்த்து இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

இதன்பின்பு தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.  இதில் இந்தியாவின் மயங்க் அகர்வால் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.  அவர் 204 பந்துகளில் (13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) 100 ரன்களை எடுத்துள்ளார்.  75 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 264 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ரோகித் 176 (244 பந்துகள், 23 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.  இதேபோன்று டெஸ்ட் போட்டியில் மயங்க் முதன்முறையாக விளையாடுகிறார்.  அவர் சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக 300 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.  ரோகித் ஆட்டமிழந்தபொழுது இந்த இணை 317 ரன்களை எடுத்திருந்தது.  இதற்கு முன் வினூ மேன்கட் மற்றும் பங்கஜ் ராய் இணை 413 ரன்கள் (கடந்த 1956ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டி) மற்றும் வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் இணை 410 ரன்கள் (கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி) எடுத்தனர்.

இதனால் அவர்களுக்கு அடுத்த நிலையில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது தொடக்க ஆட்டக்கார இணையாக ரோகித் மற்றும் மயங்க் உள்ளனர்.  கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட தொடங்கிய மயங்க் இன்று தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.  டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 86வது இந்திய வீரராகவும் அவர் உள்ளார்.