விசாகப்பட்டினம் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்


விசாகப்பட்டினம் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்
x
தினத்தந்தி 3 Oct 2019 12:27 PM GMT (Updated: 3 Oct 2019 12:27 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  

ரோகித் சர்மாவின் சதம் (176 ரன்கள்), மயங்க் அகர்வாலின் இரட்டை சதம் (215 ரன்கள்) ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 136 ஓவர்களில் 502 ரன்கள் குவித்து இருந்தது. ஜடேஜாவும் (30 ரன்கள்), அஷ்வினும் (1 ரன்) களத்தில் இருந்தனர். அப்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி, துவக்கத்திலேயே தடுமாறியது. அஷ்வின் மற்றும் ஜடேஜா சுழலை சமாளிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடும் சிரமப்பட்டனர். 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 463 ரன்கள்  பின் தங்கியுள்ளது. 


Next Story