ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக வைபவ் கெலாட் தேர்வு


ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக வைபவ் கெலாட் தேர்வு
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 10:04 PM GMT)

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழில் அதிபர் ராம்பிரகாஷ் சவுத்ரி 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் நேற்று நடந்த மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் டாக்டர் விஜய் பட்டீல் தலைவராகவும், சஞ்சய் நாயக் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற அனைத்து பதவிகளுக்கும் அவரது அணியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர்.

ரோஜர் பின்னி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story