கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:தமிழக அணி 5-வது வெற்றிமுரளி விஜய் சதம் அடித்தார் + "||" + Vijay Hazare Cup Cricket: Tamil Nadu team 5th win

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:தமிழக அணி 5-வது வெற்றிமுரளி விஜய் சதம் அடித்தார்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:தமிழக அணி 5-வது வெற்றிமுரளி விஜய் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூர், 

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி நேற்று தனது 5-வது லீக்கில் ஜம்மு-காஷ்மீர் அணியை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி 9 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்தது. கம்ரன் இக்பால் (67 ரன்), ஷூபம் பன்டிர் (66 ரன்), அப்துல் சமாத் (50 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 48 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 239 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முரளிவிஜய் 117 ரன்களும் (131 பந்து, 14 பவுண்டரி), பாபா அபராஜித் 86 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர். தோல்வி பக்கமே செல்லாத தமிழக அணி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை சுவைத்து, கால் இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.