கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:தமிழக அணி 6-வது வெற்றி + "||" + Vijay Hazare Cup Cricket: Tamil Nadu won the 6th

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:தமிழக அணி 6-வது வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்:தமிழக அணி 6-வது வெற்றி
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூர், 

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி நேற்று தனது 6-வது லீக்கில் திரிபுரா அணியை ஜெய்ப்பூரில் சந்தித்தது. முதலில் பேட் செய்த தமிழக அணி 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது. அபினவ் முகுந்த் (84 ரன்), பாபா அபராஜித் (87 ரன்) அரைசதம் அடித்தனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 40 ரன்னில் கேட்ச் ஆனார். முந்தைய ஆட்டத்தில் சதம் அடித்த முரளிவிஜய் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய திரிபுரா 34.3 ஓவர்களில் 128 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வதோதராவில் நடந்த (பி பிரிவு) பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் அமித் மிஸ்ரா தலைமையிலான அரியானா அணி 16 ஓவர்களில் வெறும் 49 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா 7 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் இந்த இலக்கை கூட பஞ்சாப் அணி தட்டுத்தடுமாறி 15.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து எட்டிப்பிடித்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...