கிரிக்கெட்

எனது கணவர் என்னை அடிக்கவில்லை; பென் ஸ்டோக்சின் மனைவி ஆவேசம் + "||" + Ben Stokes' wife dismisses report claiming the England All-Rounder choked her

எனது கணவர் என்னை அடிக்கவில்லை; பென் ஸ்டோக்சின் மனைவி ஆவேசம்

எனது கணவர் என்னை அடிக்கவில்லை; பென் ஸ்டோக்சின் மனைவி ஆவேசம்
எனது கணவர் என்னை அடிக்கவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்சின் மனைவி டுவிட்டரில் ஆவேசப்பட்டு உள்ளார்.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலையில் நடந்தது.  இதில் இங்கிலாந்து அணி முதன்முறையாக பட்டம் வென்று அந்நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.  இதன் இறுதி போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (வயது 28) ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறவும், கோப்பையை வெல்லவும் உதவினார்.

தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஆஷஸ் தொடரிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.  அவர் 3வது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 135 ரன்களை குவித்தது அந்த அணி வெற்றி பெற உதவியது.

இதனால் இந்த ஆண்டிற்கான வீரர்களுக்கான வீரர் விருதுக்கு பென் தேர்வு செய்யப்பட்டார்.  இதற்காக கடந்த வாரத்தில் தொழில் முறை கிரிக்கெட் வீரர்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.  இதில் பென் தனது மனைவி கிளார் ஸ்டோக்சுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், அவர் தனது மனைவி கிளாரின் கழுத்தின் மேல் கை வைத்திருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகின.  இதனால் ஸ்டோக்சுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு விட்டது என தகவல்கள் பரவின.

ஒரு கட்டத்தில் அமைதியை இழந்த கிளார், டுவிட்டரில் இதற்கான விளக்கத்தினை தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி நேற்று அவர் வெளியிட்ட செய்தியில், என்ன ஒரு முட்டாள்தன தகவலை மக்கள் பரப்புகின்றனர்.  என்னால் நம்பவே முடியவில்லை.  நானும், பென்னும் ஒருவருக்கொருவர் எங்களது முகத்தினை பிடித்து அழுத்தினோம்.  ஏனெனில் எங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பு வெளிப்படவே நாங்கள் இப்படி நடந்து கொண்டோம்.

இது சண்டையில்லை.  ஆனால் சிலர் இதனை தவறாக சித்தரித்து பரப்பி விட்டுள்ளனர் என ஆவேசமுடன் தெரிவித்து உள்ளதுடன் தனது கணவர் பென்னின் முகத்தில் செல்லமுடன் அடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இந்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததால் மனைவி தற்கொலைக்கு முயற்சி
குஜராத்தில் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததால் மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
2. 150 உறுப்பினர்கள் என்னிடம் உள்ளனர், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள்; ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்
150 உறுப்பினர்கள் என்னிடம் உள்ளனர் என்றும் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமுடன் கூறினார்.
3. நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற கணவர் கைது
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
4. மாநில தலைமையை மாற்ற வலியுறுத்தல்; என்னை சுட்டுவிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் ஆவேசம்
மாநில தலைமையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதால் என்னை சுட்டுவிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் ஆவேசத்துடன் கூறினார்.
5. பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல்: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.