கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றி + "||" + Indian women's team win easily against South Africa

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றிபெற்றது.
வதோதரா,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் காயமடைந்த நட்சத்திர வீராங்கனை மந்தனாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனையாக பிரியா பூனியா இடம் பிடித்தார். இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 45.1 ஓவர்களில 164 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மரிஜானே காப் 54 ரன்கள் (64 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார். இந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 


அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (55 ரன்), பிரியா பூனியா (75 ரன், 124 பந்து, 8 பவுண்டரி) அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் 11 ரன்னுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த 23 வயதான பிரியா பூனியா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே 50 ரன்களை கடந்த 7-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பிரியா பெற்றார்.

இதே போல் இந்திய கேப்டன் மிதாலிராஜியும் சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆனார். சர்வதேச ஒரு நாள் போட்டியில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 36 வயதான மிதாலிராஜ் 1999-ம் ஆண்டு முதல், ஒரு நாள் போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரோகித் சர்மா 212 ரன்கள் விளாசல்; ரஹானே சதம்
ராஞ்சியில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ரோகித் சர்மா இரட்டை சதமும், ரஹானே சதமும் விளாசினர்.
2. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று ராஞ்சியில் தொடங்கும் கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.
3. தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 326 ரன்கள் முன்னிலை
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 275 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது.
4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.
5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? - 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.