கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 7-வது வெற்றி + "||" + Vijay Hazare Cup Cricket: Tamil Nadu won the 7th

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 7-வது வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 7-வது வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி 7-வது வெற்றியை பதிவு செய்தது.
ஜெய்ப்பூர்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி ஜெய்ப்பூரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ரெயில்வேயை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ரெயில்வே 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பாபா அபராஜித் 4 விக்கெட்டும், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


பின்னர் ஆடிய தமிழக அணி 44.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பாபா அபராஜித் 111 ரன்களுடனும் (124 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), விஜய் சங்கர் 72 ரன்களுடனும் (113 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். தொடர்ந்து 7-வது வெற்றியை சுவைத்த தமிழக அணி கால்இறுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது.