கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு தேர்தல் 3 நாள் நடக்கிறது + "||" + Election for Cricketers Association 3 days going on

கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு தேர்தல் 3 நாள் நடக்கிறது

கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு தேர்தல் 3 நாள் நடக்கிறது
இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான சங்கத்துக்கு முதல்முறையாக நிர்வாகிகள் தேர்தல் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.
புதுடெல்லி,

உறுப்பினர்களாக உள்ள 1,267 கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் ஆன்-லைன் மூலம் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் முடிவு 15-ந்தேதி அறிவிக்கப்படும். இந்த சங்கத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுவுக்கு பிரதிநிதியாக 2 பேரும், ஐ.பி.எல். நிர்வாக கவுன்சிலுக்கு பிரநிதியாக ஒருவரும் அனுப்பப்படுவார்கள். இதில் செயற்குழுவுக்கு வீராங்கனைகள் தரப்பில் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி விட்டது. வீரர்கள் பிரதிநிதிக்கான இடத்துக்கு முன்னாள் வீரர்கள் கீர்த்தி ஆசாத், அன்ஷூமான் கெய்க்வாட், குஜராத் முன்னாள் வீரர் ராகேஷ் துருவ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.


வீரர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் அசோக் மல்கோத்ரா மட்டுமே நிற்பதால், அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.+

ஆசிரியரின் தேர்வுகள்...