கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி + "||" + 2nd Test against South Africa: Virat Kohli scored a century

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
புனே,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி  பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்தது.  கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரஹானே 145 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் விராட் கோலி 173 பந்துகளில் தனது 26 வது டெஸ்ட் சதத்தை அடித்தார். கேப்டனாக இது இவருடைய 19 வது டெஸ்ட் சதமாகும். இந்த ஆண்டில் கோலி அடித்த முதல் டெஸ்ட் சதம் இதுவாகும்.

உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 104 ரன்கள்(183 பந்துகள்), ரஹானே 58 ரன்களுடன்(161 பந்துகள்) களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் - பிராட் ஹாக் கருத்து
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.
2. விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி - கவாஸ்கர் புகழாரம்
விமான பயணத்தின் போது டோனி, விராட் கோலி ஆகியோர் எளிமையை கடைப்பிடிப்பவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
3. கங்குலியை போல் டோனி, விராட் கோலி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை - யுவராஜ்சிங் குற்றச்சாட்டு
கங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
4. ‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் புகழாரம்
தற்போதைய காலக்கட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் கூறினார்.
5. நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; கே.எல். ராகுல் சதம்
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்து உள்ளார்.