கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம் + "||" + Kohli doubles up to flatten SA

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்:  விராட் கோலி இரட்டை சதம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து விளாசினார்.
புனே, 

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி  பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியின் மயங்க் அகர்வால் (108 ரன்கள்)  குவித்தார்.  ரோகித் சர்மா 14 ரன்களில் வெளியேற  புஜாரா 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் கேப்டன் விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி,  195 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.  

விராட் கோலி அடிக்கும் 7-வது இரட்டை சதம் இதுவாகும்.  7 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்தியர் விராட் கோலி ஆவார்.  கேப்டனாக விராட் கோலி 9  முறை 150 ரன்களை கடந்துள்ளார்.  இதன் மூலம் விராட் கோலி, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை தகர்த்துள்ளார்.  டான் பிராட்மேன் கேப்டன் பதவியில் இருக்கும் போது  150 ரன்களை 8 முறை கடந்துள்ளார்.