தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 11 Oct 2019 11:02 PM GMT (Updated: 11 Oct 2019 11:02 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.

வதோதரா,

இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 69 ரன்னும், மிக்னான் டு பிரீஸ் 44 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே, எக்தா பிஸ்த், பூனம் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மிதாலிராஜ் (66 ரன்), பூனம் ரவுத் (65 ரன்) அரைசதம் அடித்தனர். ஹர்மன்பிரீத் கவுர் 39 ரன்னுடன் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

Next Story