கிரிக்கெட்

தடைகளையும், மனவேதனையையும் ‘யார்க்கர்’ பந்துகளால் உடைத்தெறிகிறேன் ; வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி + "||" + I break the barriers and the pain with the Yorker balls; Fast bowler Mohammed Shami

தடைகளையும், மனவேதனையையும் ‘யார்க்கர்’ பந்துகளால் உடைத்தெறிகிறேன் ; வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி

தடைகளையும், மனவேதனையையும் ‘யார்க்கர்’ பந்துகளால் உடைத்தெறிகிறேன் ; வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி
டெஸ்ட் கிரிக்கெட் என்றாலும் சரி, ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்றாலும் சரி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை, கச்சிதமாக பயன்படுத்திக்கொள்வதில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கெட்டிக்காரர்.
கடந்த 6 மாதங்களாக, இந்திய கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளை சாத்தியமாக்கிய பெருமையும் ஷமியையே சேரும். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கிடைத்த டெஸ்ட் வெற்றிக்கும், இவரே காரணம். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் இருக்கும் பல சோகங்களை மறந்துவிட்டு, ஸ்டம்பை மட்டுமே குறிவைத்து, பந்து வீசுகிறார். அதனால்தான், அவர் வீசும் ‘யார்க்கர்’ பந்துகள், ஸ்டம்பை பதம்பார்க்கின்றன. இதுபற்றி ஷமி கூறுவதை கேட்போம்.

உங்களுடைய ஆக்ரோஷத்திற்கான காரணம்?

எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் ஆக்ரோஷம் உண்டு. சிலர் அதை முகத்திலும், விளையாட்டு களத்திலும் வெளிப்படுத்துவர். சிலர் வெளிப்படுத்துவதில்லை. முன்னாள் கேப்டன் டோனி, ஆக்ரோஷத்தை முகத்தில் வெளிப்படுத்தாமல், ஆட்டத்தில் வெளிப்படுத்துவார். ஆனால் ஆக்ரோஷம், விராட் கோலியின் முகத்திலும் வெளிப்படும், ஆட்டத்திலும் வெளிப்படும். இப்படி ஒவ்வொருவருக்கும் தனி சுபாவம் உண்டு. அதில் என்னுடையது, அமைதியான ஆக்ரோஷம்.

ஸ்டம்பை அடிக்கடி உடைப்பது பற்றி?

(சிரிக்கிறார்) யார்க்கர் வீசுவதற்கு பயிற்சி எடுக்கலாம். பவுன்சர் வீசுவதற்கு பயிற்சி எடுக்கலாம். இப்படி பிரத்யேக பந்துகளை வீச பயிற்சி எடுக்கலாம். ஆனால் ‘ஸ்டம்ப்’பை உடைப்பதற்கு எல்லாம் பிரத்யேகமாக பயிற்சி எடுக்கமுடியாது. ஸ்டம்ப் உடைவதும், பல முறை சுழன்று விழுவதும், பவுண்டரி வரை பறப்பதும்... எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது.

உங்களுக்கான வாய்ப்பு நிரந்தரமாக இல்லை என்று வருத்தப்பட்டது உண்டா?

இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறமைசாலிகள் அங்கம் வகிக்கின்றனர். அதில், எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைப்பது, சந்தோஷமான ஒன்றுதான்.

உங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள், உங்களுடைய வாய்ப்பை குறைத்துவிட்டதா?

அப்படி நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்தாலும், பிரச்சினை இல்லை. ஏனெனில், என்னுடைய சொந்த வாழ்க்கைக்குள்தான், கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது.

முகமது ஷமி என்ற பெயர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாவது எப்படி?

சில சமயங்களில் சர்ச்சையும் நல்லதுதான். நான் அப்படிதான், கடந்து செல்கிறேன்.

வேகப்பந்து வீச்சாளருக்கு உடல்தகுதி என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை நீங்கள் சரியாக புரிந்து வைத்திருக்கிறீர்களா?

இதுவரை நான் சம்பாதித்த சொத்துக்களில், உடல் வலிமையும், உடல் ஆரோக்கியமும்தான், எனக்கானது. இதை நான் நன்கு அறிவேன். அதனால்தான், உடற்பயிற்சி விஷயத்தில் சமரசம் செய்வதே இல்லை. காயத்தினால் விளையாட்டில் இருந்து விலகி இருந்த காலத்தில் கூட, லேசான உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன்.

தொடர்புடைய செய்திகள்

1. ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியுடன் அவரது மனைவி ஹசின் ஜஹான் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
2. தற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை எண்ணினேன் - ரோகித் சர்மாவிடம் பகிர்ந்த முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை எண்ணியதாக கூறி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.