கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி + "||" + 2nd Test against South Africa: India wins

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
புனே,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடந்தது. இன்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு இரண்டு இன்னிங்சிலும் மொத்தமாக 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.


தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இன்றைய போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 189 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்கா அணியின் அனைத்து விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் வீழ்த்தப்பட்டதால் இந்திய அணி 137 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் (254 ரன்) அடித்து சாதனை படைத்தார். உமேஷ் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதுவரை ஆஸ்திரேலிய அணி 10 தொடர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 11 வது டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்தியா இப்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 19-ஆம் தேதி  ராஞ்சியில் நடைபெற உள்ளது.