கிரிக்கெட்

‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி + "||" + We also win the last Test Kohli

‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி

‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி
இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில்,கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம் என்று கோலி நம்புகிறேன் என்றார்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘டெஸ்டில் 7 இரட்டை சதங்கள் அடித்தது குறித்து கேட்கிறீர்கள். நான் சில தினங்களுக்கு முன்பு சொன்னது போல கேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க முடிகிறது. இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற நோக்குடன் களம் இறங்கினால் அதை அடைய முடியாது. அணிக்காக 5 பகுதிகள் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினால் இரட்டை சதம் தானாக வந்து சேரும். இந்த மனநிலையுடன் ஆடுவதால் தான் என்னால் பெரிய ஸ்கோர் குவிக்க முடிகிறது. ஆரம்ப காலத்தில் தனிப்பட்ட ஆட்டம் மீது அதிக கவனம் செலுத்தி விளையாடினேன். அதனால் எனக்குள் நெருக்கடி தான் உருவானது. ஆனால் அணி குறித்து சிந்தித்து விளையாடத் தொடங்கியதும் எல்லா நெருக்கடியும் விலகி போய் விட்டது.


உள்நாட்டில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை வென்றது சிறப்பான விஷயம். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் இருப்பதால் ஒவ்வொரு டெஸ்டும் மிகவும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டுள்ளோம். அதனால் கடைசி டெஸ்டில் எந்த வகையிலும் ரிலாக்சாக இருக்க மாட்டோம். இதே உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெறுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.

கோலியின் தலைமையில் 30-வது வெற்றி

* விராட் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி 50-வது டெஸ்டில் பங்கேற்று அதில் பெற்ற 30-வது வெற்றி இதுவாகும். கேப்டனாக முதல் 50 டெஸ்ட் போட்டிகளில், அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (37 வெற்றி), ரிக்கிபாண்டிங் (35 வெற்றி) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார். கோலியின் கேப்டன்ஷிப்பில் உள்நாட்டில் இந்தியா 17 வெற்றிகளும் (23 டெஸ்ட்), வெளிநாட்டில் 13 வெற்றிகளும் (27 டெஸ்ட்) பெற்றுள்ளன.

* கோலியின் தலைமையில் இந்தியா பதிவு செய்த 8-வது இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இந்திய கேப்டன்களில் அதிக இன்னிங்ஸ் வெற்றியை தேடித்தந்தவர்களில் டோனி (9 வெற்றி) முதலிடம் வகிக்கிறார்.

* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது இது 2-வது நிகழ்வாகும். ஏற்கனவே 2010-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தென்ஆப்பிரிக்கா கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு இன்னிங்ஸ் தோல்வியை தழுவியிருக்கிறது. இரண்டும் இந்தியாவுக்கு எதிராகவே நடந்துள்ளது.

* இந்த டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சராசரியாக 21.75 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் சராசரியாக 75.84 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இந்த வகையில் ஏற்படும் வித்தியாசம், ஒரு தொடரில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் மோசமான செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

* கடந்த 11 ஆண்டுகளில் தென்ஆப்பிரிக்க அணி முதல்முறையாக இந்த டெஸ்டில் தான் ‘பாலோ-ஆன்’ பெற்றுள்ளது. கடைசியாக 2008-ம் ஆண்டு லண்டன் லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாலோ-ஆனுக்கு தள்ளப்பட்ட தென்ஆப்பிரிக்கா அந்த டெஸ்டில் டிரா செய்திருந்தது.

* வெளிநாட்டு மண்ணில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

* தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன் ஏதுமின்றி டக்-அவுட் ஆனார். தடை காலம் முடிந்து தென்ஆப்பிரிக்கா மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு (1991-ம் ஆண்டில் இருந்து) இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆன 3-வது தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் மார்க்ராம் ஆவார்.

கடைசி டெஸ்டில் இருந்து கேஷவ் மகராஜ் விலகல்

கேஷவ் மகராஜ்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ், இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பீல்டிங்கின் போது பாய்ந்து விழுந்ததில் வலது தோள்பட்டையில் காயமடைந்தார். வலியுடனே அவர் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து அவர் விலகியுள்ளார். அவரது காயம் குணமடைய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு பதிலாக புதுமுக சுழற்பந்து வீச்சாளர் 27 வயதான ஜார்ஜ் லின்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

கேஷவ் மகராஜ் இந்த தொடரில் மொத்தம் 127 ஓவர்கள் பந்து வீசி 514 ரன்களை வாரி வழங்கி 6 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். பந்து வீச்சில் சோபிக்காத அவர் ஆச்சரியமளிக்கும் வகையில் பேட்டிங்கில் அரைசதம் உள்பட 103 ரன்கள் சேர்த்து கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’- டிவில்லியர்ஸ்
‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’ என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
2. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு
ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
3. சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கரா? கோலியா? - கம்பீர் பதில்
சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கரா அல்லது விராட்கோலியா என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.
4. உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி - இயான் சேப்பல்
தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
5. தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் - பிரெட்லீ சொல்கிறார்
தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் என்று பிரெட்லீ தெரிவித்துள்ளார்.