கிரிக்கெட்

‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ் + "||" + We stumble upon a lack of experience Du plessis

‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ்

‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ்
புனே டெஸ்டில் படுதோல்வி அடைந்த பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்.
புனே,

புனே டெஸ்டில் படுதோல்வி அடைந்த பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘இந்திய துணை கண்டத்தில் விளையாடும் போது, முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டியது முக்கியம் என்பதை அறிவோம். அப்போது தான் வெற்றி வாய்ப்பை பெற முடியும். இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை. அடுத்த டெஸ்டில் முன்னேற்றம் காண முயற்சிப்போம். விராட் கோலியின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்த தொடரை வெல்வதற்கு இந்தியா தகுதியான அணி.


உலகின் சிறந்த அணி என்றால், நிறைய அனுபவம் இருக்க வேண்டும். இப்போது நாங்கள் கிட்டத்தட்ட எல்லா அனுபவத்தையும் இழந்து விட்டோம். அனுபவம் வாய்ந்த ஸ்டெயின், மோர்னே மோர்கல், அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர். அவர்களது இடத்தை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது. இப்போது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி உள்ளனர். அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள காலம் பிடிக்கும். அணியில் உள்ள சிறந்த வீரர் கள் வெளியேறும் போது, எந்த அணியும் இது போன்ற சவாலை (தடுமாற்றத்தை) சந்தித்து தான் ஆக வேண்டும்’ என்றார்.