கிரிக்கெட்

பிசிசிஐ மீது உள்ள களங்கத்தை துடைக்க எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் -கங்குலி பேட்டி + "||" + Sourav Ganguly Says Being BCCI Chief Great Opportunity To Fix Its Image

பிசிசிஐ மீது உள்ள களங்கத்தை துடைக்க எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் -கங்குலி பேட்டி

பிசிசிஐ மீது உள்ள களங்கத்தை துடைக்க எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் -கங்குலி பேட்டி
பிசிசிஐ மீது கடந்த காலங்களில் ஏற்பட்டு உள்ள களங்கத்தை துடைக்க எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என கங்குலி கூறி உள்ளார்.
மும்பை, 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.  பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,  கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றாலும், வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார். 

இது குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:-

 "போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பாக இருப்பதால் பொறுப்பு இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாக இருக்கிறது, எனவே இது ஒரு சவாலாக இருக்கும்."

நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த அமைப்பிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை  துடைக்க இந்த நேரத்தில் ஏதாவது செய்ய எனக்கு கிடைத்து இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. நல்ல நிலையில் இல்லாத நேரத்தில் நான் பொறுப்பேற்கிறேன்.

நான் எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் முதலில் எல்லோரிடமும் கலந்து  பேசுவேன். ஆனால் முதல் தர கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதே எனது மிகப்பெரிய முன்னுரிமை ஆகும். கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்திருந்தேன். அவர்கள் கேட்கவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த ஐ.சி.சி. தலைவர் கங்குலி - கிரேமி சுமித் விருப்பம்
அடுத்த ஐ.சி.சி. தலைவராக கங்குலியை தேர்வு செய்ய வேண்டும் என்று கிரேமி சுமித் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
2. ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை; இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது - பிசிசிஐ
ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்தநிலையில், இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
3. இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த நடவடிக்கைகளையும் ஏற்கத் தயார் - பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த நடவடிக்கைகளையும் ஏற்கத்தயாராக இருப்பார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? -கங்குலி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? என்பது குறித்து சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து டோனி நீக்கம்
இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார்.