கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் -பிசிசியின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி + "||" + Sourav Ganguly Says He "Never Expressed Aspirations To Be BCCI President

இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் -பிசிசியின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் -பிசிசியின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று பிசிசியின் புதிய தலைவராக தேர்வான சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.
மும்பை, 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக  தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

முன்னதாக  வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுயதாவது; இன்னும் சில மாதங்களில் இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும். அணியுடன் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் இடத்தில் இருப்பது மகிழிச்சி அளிக்கிறது. நான் ஒருபோதும் பிசிசிஐ தலைவராக எந்த விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை.

பி.சி.சி.ஐ ஒழுங்காக அமைக்கப்பட வேண்டும். எந்த அரசியல்வாதியும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. மம்தா தீதிக்கு (மேற்கு வங்காள முதல்வர்) நான் நன்றி கூறிக்கொள்கிறேன், மேலும் அவர் ஆதரவைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என கூறினார்.

கங்குலி பிசிசியின் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கபட்டதற்கு  மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கங்குலி இந்தியாவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் என வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
2. அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி
சோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
4. தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்
தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.
5. பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும், மும்பையை சேர்ந்த வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்.